குருவாயூர் கோவிலில் 263 கிலோ தங்கம் உள்ளது - கோவில் நிர்வாகம் தகவல்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உலகப்புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குருவாயூரை சேர்ந்த எம்.கே.ஹரிதாஸ் என்பவர், கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி விண்ணப்பித்தார்.
கோவிலின் சொத்து விவரம், வங்கிக்கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார்.
அதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக வங்கிக்கணக்குகளில், ரூ.1,737 கோடி டெபாசிட் இருப்பதாகவும், கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் கூறியிருந்தது.
மேலும், தங்கம், வெள்ளி இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை தெரிவிக்க முடியாது என்றும் கூறியிருந்தது.
இருப்பினும், மனுதாரர் ஹரிதாஸ், அந்த தகவல்களையும் கேட்டு, மேல்முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் தங்கம் தொடர்பான விவரங்களையும் அளித்துள்ளது.
அதன்படி, கோவிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கம் உள்ளது. இவற்றில், விலை உயர்ந்த கற்களும், நாணயங்களும் அடங்கும்.
6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும் உள்ளது. சில பொருட்களின் பழமை தெரியாததால், அவற்றின் மொத்த மதிப்பை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே