பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்... நாளை தொடங்குகிறது யாகசாலை பூஜை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜை தொடங்குகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் அனுமதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51, 295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர். பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.
அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே