திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.25ல் தொடக்கம்..!

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.25ல் தொடக்கம்..!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்குகிறது; 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு)  அன்புமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்குகிறது. 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 

இதையொட்டி, அக். 25ஆம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்படுதலைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

2ஆம் நாள்முதல் 5ஆம் நாள்வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அக். 30ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

31ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்