திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ் இயக்கப்பட உள்ளது.
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ் இயக்கப்பட உள்ளது.
ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலெக்ட்ரிக் பஸ்கள் திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த பஸ்களை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பஸ், பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ இயக்கலாம்.
வரும் 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பஸ்கள் வர உள்ளன.
ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
அன்று முதல்வர் ஜெகன் ,இந்த பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த பிரமோற்சவம் திருமலையில் ஒரு புதிய சாதனையை செய்ய உள்ளது.