கோலாகலமாக தொடங்கியது கள்ளழகர் கோவில் தேரோட்டம்

கோலாகலமாக தொடங்கியது கள்ளழகர் கோவில் தேரோட்டம்

மதுரை கள்ளழகர் கோவில் தேரோட்டம் இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா வருடந்தோரும் விமரிசையாக நடைபெறும். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக ஆடி பெருந்திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திருவிழாவை கோலாகலமாக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 

கள்ளழகர் ஆடிபெருந்திருவிழா கடந்த 4 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும், தங்க பல்லக்கில் எழுந்தருளி, அன்னம், கெருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வருகிறார். 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.57%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.02%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.4%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்