திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் 15 மணி நேரம் தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் !

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் 15 மணி நேரம் தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ,15 மணி நேரமாக சுவாமி தரிசனத்திற்கு மக்கள் காத்திருந்தன 

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருந்ததால் திருப்பதியில் பக்தர்கள் இன்றி பவித்ர உற்சவம் நடைபெற்று வந்தது .இந்த நிலையில் இந்த ஆண்டு பவித்ர உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பவித்ர உற்சவத்தில் கலந்து கொள்ளக் கடந்த 3 நாட்களாகத் திரளான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். 

அதோடு வைகுந்தம் வளாகம் 25 அறைகளும் நிரம்பி நீண்ட தூரத்துக்குப் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 74 ஆயிரத்து 497 பேர் தரிசனம் செய்தனர். 

36 ஆயிரத்து 244 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வருகிற சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறை  ஆகியவற்றையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்