ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் ரூ.1 கோடியை தாண்டியது...!

ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம்  ரூ.1 கோடியை தாண்டியது...!

ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியை தாண்டியது. 

இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது.

துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கடந்த 1 மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ரூபாய் 1 கோடியே 31 ஆயிரத்து 878 பணமும், 88 கிராம் 500 மில்லி கிராம் தங்கமும், 2 கிலோ 310 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்