திருமலை ஏழுமலையான் கோயில் - விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை ஏழுமலையான் கோயில் - விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வரும் 7 - 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. 

இதையடுத்து 7 - 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 

எனவே வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்