மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு...!

மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு...!

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா விரிஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற மார்க்க பந்தீஸ்வரர் கோயிலில் ஒரு சாமி சிலை பள்ளத்தில் இருந்தது உள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அதை எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது சுமார் 4 அடி உயரமுள்ள கருங்கல்லால் செய்யப்பட்ட ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிலை என தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் சங்கர் தட்சணாமூர்த்தி சிலையை பாதுகாப்பாக வைத்து தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிலையை வந்து பார்த்து வணங்கி வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்