ஆண்டாள் கோவில் தேரோட்டம் - ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆண்டாள் கோவில் தேரோட்டம் -  ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. பின்னர் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்