ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா ஆரம்பம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா ஆரம்பம்

ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் மாசி திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 

முன்னதாக, அம்பாள் சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. அப்போது கொடி மண்டபம் எதிரே வைக்கப்பட்டிருந்த பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். 

வருகின்ற ஆகஸ்ட் 8 - ஆம் தேதி வரை 17 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் வருகின்ற 31 - ஆம் தேதி அன்று அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 2 - ஆம் தேதி அன்று சாமி - அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 3 - ஆம் தேதி அன்று சாமி - அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்