அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்!

அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16ம் தேதி திறப்பு... அதற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்!

வருடந்தோறும் ஆடி மாத பூஜைகளுக்காகா சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடையானது ஆடி மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம். அப்படி இந்த வருடத்திற்கான நடைதிறப்பு வருகிற ஜூலை 16ம் தேதி என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கோவில் நிர்வாகம் கூறியதாவது, அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். மறுநாள் அதிகாலை நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

அதன் பிறகு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் வருகிற ஜூலை 21ம் தேதி இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்படும் எனவும் , மேலும் பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று அதாவது ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது எனவும் அறிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்