418 வருடங்களுக்கு பிறகு நடந்து முடிந்த கும்பாபிஷேக விழா!

418 வருடங்களுக்கு பிறகு நடந்து முடிந்த கும்பாபிஷேக விழா!

சுமார் 418 வருடங்களுக்கு பின் திருவட்டார் ஆதிகேசவர் கோவிலில் குடமுழுக்கு!

சுமார் 418 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. 

இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதே போல, இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதிட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது!

மேலும், இன்று திருவாரூர் மாவட்டம் குமரக்கடவுள் ஆலயத்திலும் , நெல்லை வண்ணாரப்பேட்டை பேராத்து செல்வியம்மாள் ஆலயத்திலும் நடைபெற்ற மகா குடமுழுக்கு திரளான பக்தர்களோடு நடைபெற்றது.

Find Us Hereஇங்கே தேடவும்