மயிலாப்பூர் குளத்தில் மயில் சிலையை தேடும் பணி தீவிரம்.!

மயிலாப்பூர் குளத்தில் மயில் சிலையை தேடும் பணி தீவிரம்.!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலையை கோயில் குளத்தில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை கடந்த 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழாவுக்கு பிறகு அந்த சிலை காணமல் போனது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இது ஆகமவிதிகளுக்கு எதிரானது என்றும் புதிய சிலையை அகற்றிவிட்டு ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோயில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 அடி ஆழம் கொண்ட இக்குளத்தில் காலை முதலே தேடும் பணியானது தொடங்கப்பட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்