திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு : திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு : திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய இலவச தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. 

இதன்படி, காலை 10 மணிக்கு, மற்றும் பிற்பகல் 3 மணிக்கு மூத்த குடிமக்கள் புகைப்பட அடையாளத்துடன் இருக்கக்கூடிய வயது நிரூபண சான்றிதழை S 1 கவுண்டரில் அறிக்கை செய்ய வேண்டும். கேலரியிலிருந்து கோயிலின் வலது பக்க சுவர் வரை சாலையைக் கடக்கும் பாலத்தின் கீழ் வரை மூத்த குடிமக்கள் எந்த படிகளும் ஏறத் தேவையில்லை.

 சிறப்பான இருக்கை வசதிகளுடன் கூடிய, தரமான உணவும் வழங்கப்படுகிறது. இவை அனைத்து இலவசம். மூத்த குடிமக்கள் 20 ரூபாய் செலுத்தி இரண்டு லட்டுக்களை பெறலாம். கோவிலில் பேட்டரி கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு 08772277777  என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்