திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி!

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி!

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசத்திற்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஒருநாளுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்களை ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் திருப்பதி கோயிலில் வழிபடும் இலவச தரிசன டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இன்று காலை 9 மணி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளை விநியோகம் செய்யப்படுகிறது. இந்த இலவச தரிசன டிக்கெட்டை திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திஅர்ம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்