முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்!

முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்!

முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்!

பழநியில் முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு, தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. 

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தது. 

இவ்விழாவில், வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதையடுத்து வள்ளியின் பிறந்த வீடான குறவர் இன மக்கள் சார்பில் தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த குறவர் இன மக்களில் ஒரு குழுவினர் பழநி முருகனுக்கு நேற்று தாய்வீட்டு சீதனம் கொண்டு வந்தனர்.

இதில் தேன், திணைமாவு, மா, பலா, வாழை, மக்காச் சோளம் என பல்வேறு வகையான பழங்கள், கிழங்கு வகைகள், வில் – அம்பு போன்றவை சீதனமாக வைத்து பழநி நகரின் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஆன்லைன் விளையாட்டுக்கள் முழுமையாக தடை செய்யப்படவில்லை : சட்டத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ரகுபதியின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

  • முழுமையான தடை அவசியம்
  • கண்துடைப்பான நடவடிக்கை
  • மக்களை ஏமாற்றும் செயல்
  • சரியான கருத்துதான்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்