சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம், சங்கு, தண்ணீர் வைத்து பூஜை!

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம், சங்கு, தண்ணீர் வைத்து பூஜை!

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம், சங்கு, தண்ணீர் வைத்து பூஜை!

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். 

அதை சாமியிடம் பூ போட்டு உத்தரவு வந்த பின்னர், கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இந்த பொருளுக்கு  கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் தோன்றும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்யப்படும். இப்படி உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்  காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்நிலையில், பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்