திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்., 15ம் தேதிக்கு பிறகு நேரடி இலவச தரிசனம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்., 15ம் தேதிக்கு பிறகு நேரடி இலவச தரிசனம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15ம் தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கோயில்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் கொரோனா நெறிமுறைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பிப்ரவரி மாதத்திற்கான 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் வெளியிடப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் பக்தர்கள் அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்து கொண்டனர். 

இதற்கிடையில் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று  குறையும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளதால் அதன் பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்