வடபழனி முருகன் கோவில் - சிறப்பு பூஜைக்கு கட்டணம் இல்லை

வடபழனி முருகன் கோவில் - சிறப்பு பூஜைக்கு கட்டணம் இல்லை

வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக எந்தவித கட்டணமும் கிடையாது என இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் நேற்று ( ஜன. 23 ) குடமுழுக்கு நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலில் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் இன்று முதல் வியாழன் வரை பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் வடபழனி முருகன் கோயில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சிறப்பு பூஜைக்காக எந்தவித கட்டணமும் கிடையாது எனவும் அதேபோல குடமுழுக்கு ஒட்டி நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லை எனவும் இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்