தைப்பூசம் - பழனியில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்
திண்டுக்கலில் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதியில்லாத நிலையில் கிரிவல பாதையில் வலம் வருகின்றனர். மேலும் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அனுமதியின்றி இன்று ( ஜன. 18 ) மாலை கோயில் வளாகத்தில் தேரோட்டம் நடக்கிறது.
இதே போல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ( ஜன. 18 ) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.