வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று ( ஜன. 18 ) காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவில் 7 திரை நீக்கி ஆறுமுறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த தரிசனத்தைக் காண உலகலில் உள்ள சாதுக்கள் அனைவரும் வடலூருக்கு வருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக ஜோதி தரிசனத்தை காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் வரும் 19ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காண்பிக்கப்படும் இறுதி ஜோதி தரிசனத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்