வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் 5 மணிநேரத்தில் விற்ற 50,000 இலவச தரிசன டிக்கெட்டுகள்...!

வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் 5 மணிநேரத்தில் விற்ற 50,000 இலவச தரிசன டிக்கெட்டுகள்...!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அந்த தினம் முதல் வரும் 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி நாளில் ஆன்லைனில் ரூ. 300 டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம் பெற்ற பக்தர்கள் மற்றும் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இது தவிர உள்ளூர் மக்களுக்கு தினமும் 1000 டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 50,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி டிக்கெட்டுக்கள் பெற நேற்று முன்தினம் மாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து திருப்பதி எஸ்.பி வெங்கடாசல அப்பல நாயுடு தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். 

இந்நிலையில் டிக்கெட் கவுண்டர்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டது தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்தது. இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் கூட்டம் சேர்வது தவிர்க்க இரவு நேரத்திலேயே டிக்கெட் வழங்க முடிவெடுத்து. 

அதன்படி நேற்று முன்தினம் இரவு 9:30 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 2:30 மணி அளவில் 50,000 டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்