நலமருளும் நவாம்ச ஆஞ்சநேயர்..!

நலமருளும் நவாம்ச ஆஞ்சநேயர்..!

நலமருளும் நவாம்ச ஆஞ்சநேயர்.....!

   மதங்களுள் பீட மாதமானாலும் , மாதவனுக்குப் பிடித்த மாதம் மனதுமான மார்கழியில் அவதரித்தவர் மாருதி . அவரை வழிபட்டால் மங்களங்கள் யாவும் சேரும் அனுமானுக்கென்று தனியே கோயில் அமைந்து ஆராதனைகள் நடைபெறுகின்ற தலங்களுள் ஜெங்கமநாயக்கன்பாளையமும் ஒன்று.

 அனுமன் இங்கே நவாம்ச சஞ்சீவ ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரது கோயிலுக்கு எதிரே உள்ளமலை சஞ்சீவ மலை என்று அழைக்கப்படுகிறது. இராம இராவண யுத்தத்தின் போது, லட்சுமணனைக்  காத்திட, ஆஞ்சநேயர் சம்யஞ்சீவியாகச் சென்று சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு வான்வழியே சென்றபோது, அதிலிருந்து விழுந்த ஒரு சிறு தூண்டுதான் இந்த மலை என்று நம்பப்படுகிறது. அக்காலத்தில் ஒரு சீரடி மலை என்று

அழைக்கப்பட்டதாகக் 

கூறப்படுகிறது.

  இந்தக்கோயிலில் நவாம்ச சஞ்சீவீ ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமைகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால், ராகு தோஷ பாதிப்புகள் விலகும்; புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்தால், சனி பகவானால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும், நலமான வாழ்வு அமையும் என்கின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்