ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கபட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் பகல்பத்து விழாவில் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார் நம்பெருமாள். 

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இந்நிலையில் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி 19ம் ஆண்டிற்கு ஒருமுறைவரும் இந்த நிகழ்வு அரங்கேறும். ரங்கா ரங்கா முழக்கத்துக்கு இடையே பரதபதவாசலைக் கடந்தார் நம்பெருமாள்.

பக்தர்களுக்கு காலை 7 மணிமுதல் மூலர் சேவைக்கும், சொர்க்கவாசல் சேவைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் சுற்றுப்புறம் மற்றும் கோயில் மற்றும் கோயில் உள்புறத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்