தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி!

தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி!

தடுப்பூசியை
செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி!

 மதுரை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பதில்
தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த தொடங்கியபின்,
ஏற்பட்ட கொரோனா மரணங்களில் 84 சதவீத தடுப்பூசி செலுத்தாதவர்கள் என பொது சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.எனவே தான் 100 சதவீதம் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு
மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 7.55 கோடி தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டுள்ளன.

 இதனிடையே கொரோனா நோய் 3வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கொரோனா தடுப்பூசி இரண்டு
தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 கோவிட் தடுப்பூசி சான்றிதழ்
நகல், மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ், பதிவு செய்யப்பட்ட கைபேசி
எண்ணில் குறுந்தகவல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்