திருப்பதி பாத யாத்திரை செல்ல 2 நாட்களுக்கு தடை...

திருப்பதி பாத யாத்திரை செல்ல 2 நாட்களுக்கு தடை...

கனமழை எச்சரிக்கையால் இன்றும், நாளையும் பாதயாத்திரைக்கு தடைவிதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

அதன் தொடர்ச்சியாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் மிக பலத்த கனமழை பெய்யும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையால் இந்த தடைவிதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்