மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு.!

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு.!

கேரள மாநிலம் சபரிமலை கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று நடை  திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருடாந்திர யாத்திரை இன்று தொடங்குகிறது. 

41 நாட்கள் மண்டல பூஜை விழா டிசம்பர் 26ம் தேதி நிறைவு பெறும். மகரவிளக்கு யாத்திரைக்காகா ஐயப்பன் கோயில் டிசம்பர் 30ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

இந்நிலையில் சபரிமலை யாத்திரை கொரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அத்துடன் 72 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை சான்றிதழையும் கொண்டுவருவது அவசியம்.

இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள சபரிமாலை யாத்திரையில் தினமும் 30,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்