சபரிமலைக்கு பக்தர்கள் வர அக்டோபர் 21ம் தேதி வரை தடை..!

சபரிமலைக்கு பக்தர்கள் வர அக்டோபர் 21ம் தேதி வரை தடை..!

கேரளாவின் சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐப்பசி மாதத்தை முன்னிட்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற இருந்தது.

அதன்பின் பக்தர்கள் தரிசனத்துக்காக ஐந்து நாட்கள் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆனால், பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இதனால், அக்டோபர் 21ம் தேதி அவரை சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்