சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை கோயில் திறக்கப்படுகிறது. 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலையின் www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசியல் பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு  தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அறிவிக்கப் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்