மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 70 கடைகளை அகற்ற கடையின் உரிமையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ்!!

 மீனாட்சியம்மன் கோயிலில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்ற கோயில் நிர்வாகம் நோட்டீஸ்!!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 70 கடைகளை ஒரு மாதத்திற்க்குள் அகற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2018ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம், 40 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமானது. இதற்கு கடைகளில் ஏற்பட்ட மின் கசிவே காரணம் என்பதால் அங்குள்ள கடைகளை அகற்ற அப்போதே கோயில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதே பகுதியில் கடைகள் செயல்பட அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் மதுரை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுனர். இந்த  உத்தரவின் பேரில் கோயிலில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும்  70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்