மகாளய அமாவாசை: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

மகாளய அமாவாசை: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பதற்காக வடபழனி முருகன் கோயிலில்  தனிமனித இடைவெளியை காத்தில் பறக்கவிட்ட பக்த்தர்கள்.

மாகாளய அமாவாசையை முன்னிட்டு  எள்ளு, வாழைப்பழம், தேங்காய் மற்றும் அருகம் புல் வைத்து நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுப்பதும், அகத்துக்கீரை பசுமாட்டிற்கு கொடுப்பதும் வழக்கம். அதன்படி  வடபழனி முருகன் கோயிலில்  தனிமனித இடைவெளியின்றியம் முறையாக முகக்கவசம் அணியாமலும் பக்தர்கள் குவிந்தனர்.

கோயில் குளத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் கோயிலின் வடக்கு மாட தெருவில் சாலை இருபுறங்களிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்கள் தனிமனித இடைவெளியின்றியும், முறையாக முகக்கவசம் அணியாமலும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கொரோனா தொற்று வரவும் அபாயம் உள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்