புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில்!..

புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில்!..

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை இன்று திறக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் 1961-இல் கண்ணாடி அறை  அமைக்கப்பட்டது. அதன் பிறகு 2006 இல் அந்த அறை பழுதுபார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கண்ணாடிகளின் பாதரசமும் அதிலிருந்த மரக்குச்சிகளும் செல்லரித்துப் போயிருந்தது. 

இந்நிலையில், பக்தர்களில் ஒருவரான தாமஸ்.எஸ்.நாராயணன் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்து தந்துள்ளார்.

இதற்கான திறப்பு விழா வெகுவிமர்சையாக  இன்று நடந்தேறியது புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி - பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். .

இதையடுத்து, உபயதாரரான தாமஸ் நாராயணனுக்கு கோவில் நிர்வாகத்தால்  கௌரவமளிக்கப்பட்டது

Find Us Hereஇங்கே தேடவும்