அன்னத்தின் மூலம் ஆண்டவனின் அனுக்ரஹம் பெற!

அன்னத்தின் மூலம் ஆண்டவனின் அனுக்ரஹம் பெற!

தினம் தினம் தெய்வத்தின் அனுக்ரஹத்தால்தான் நம் வாழ்வு சீராக சென்று கொண்டிருக்கிறது. 

பொதுவாக உணவுக்கு சில தோஷம் உண்டு.  விளைச்சலில் ஏற்பட்ட தோஷம், பொருள் கிடைத்த விதத்தில் தோஷம், சமைக்கும்போது ஏற்பட்ட தோஷம் இப்படி பலவகைகளில் அன்னத்துக்கு தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு என்கிறது புராணம்.  அத்தகையை தோஷம் எதுவாயினும் அது தெய்வத்துக்கு நைவேத்தியம் செய்தவுடன் பிரசாதமாக மாறி பரிசுத்தமாக ஆகிவிடும். 

அதனால்தான், தினமும் சமையல் முடித்தவுடன், உணவை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்.  

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரசாதம் ஒவ்வொரு தெய்வத்துக்கு வெவ்வேறு பிரசாதம் என்றெல்லாம் செய்ய சொன்னதும் நம் ஆயுள் ஆரோக்கியம் சீராக இருக்கத்தான்.

ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து அதன் பிறகு உண்ணும் அந்த பிரசாதம் நம் ஆயுளையும், ஆரோக்கியத்தை காத்து, வாழ்வை சிறக்க வைக்கும் என்பது ஐதீகம்! 

Find Us Hereஇங்கே தேடவும்