திருப்பதியில் இன்று முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி.!

திருப்பதியில் இன்று முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி.!

திருப்பதியில் இன்று முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் அனைத்து மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்படும் இலவச டிக்கெட் 2,000லிருந்து 8,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்