கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய தென்திருப்பதி.!

கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய தென்திருப்பதி.!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தென் திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுவது பெருமாள் மலை கோயில். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமான இன்று கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய காணப்படுகிறது. 

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 

இதனால் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் இன்றி தென்திருப்பதியான மலைமேல் பக்தர்கள் இன்றி காட்சி அளித்தது.

இதற்கிடையில் பக்தர்கள் இல்லாமல் வழக்கம் போல் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி, தயார் கருப்பண்ணார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அதிகாலை திருமஞ்சனம் செய்து சிறப்பு வழிபாடுகல் நடைபெற்றன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து புரட்டாசி சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கல் பெருமாள் மலை வந்து பெருமாளை தரிசித்து செல்லும் நிலையில் தற்போது தமிழக அரசின் தடை உத்தரவால் பக்தர்கள் வருகையின்றி பெருமாள் மலை வெறிச்சோடி காணப்பட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்