புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு.!

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு.!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் நாளை மீண்டும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்