திருப்பதி கோயிலில் மோசடி !

திருப்பதி கோயிலில் மோசடி !

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் வைத்து தரிசிக்க வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் மேலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிக்க வந்து போகும் திருப்பதியில், ரூ.300 தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்று வந்தவர்களில் ஒரு சிலர் போலி டிக்கெட்டுகளை வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரபூர்வமான இணையதளத்தில் மட்டுமே தரிசன டிக்கெட் பெறப்படும் நிலையில் இந்த போலி டிக்கெட் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்