சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு -திருவிதாங்கூர் தேவஸ்தானம்

 சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு -திருவிதாங்கூர் தேவஸ்தானம்

ஆவணி மாதம், ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக வரும் 15ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தினசரி அனுமதிக்கப்பட்ட 10000 பேர்  வழிபாட்டிற்கு வருகையில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், தரிசனம் பெறுவதற்கு முன் 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் இல்லையெனில், கொரோனா இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழும் காண்பிக்க வேண்டும் என்றும் இவையெல்லாம் இல்லாத பட்சத்தில் முன்பதிவு செய்திருந்தாலும் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்