சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15ஆம் தேதி திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15ஆம் தேதி திறப்பு..!

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது. 

கொரோனா பரவல் எதிரொலியாக, தினந்தோறும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 10,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 16 முதல் 23ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். 

மறுநாள் 16ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெறும். நிறை புத்தரிசி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்