சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கோவிலின் பக்தர்கள் இல்லாமல் எளிமையான முறையில் மாதாந்திர பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய தொடர்ந்து கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

இதன்காரணமாக கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் படி இன்று முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Find Us Hereஇங்கே தேடவும்