கொரோனா அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்திரை ரத்து

கொரோனா அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்திரை ரத்து

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை, பனியில் சிவலிங்கம் உருவாகும். இந்த பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 

இந்நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டிற்கான யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா நேற்று வெளியிட்டார்.

மேலும், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க, அமர்நாத் பனி லிங்கத்திற்கு காலை மற்றும் மாலை வேளையில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகளைடிவி யில் ஒளிபரப்பவும் அதிகாரிகளுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்