இதை செய்யுங்கள்: அனைத்து சிவாலயங்களையும் தரிசனம் செய்த பலன் கிட்டும்!

இதை செய்யுங்கள்: அனைத்து சிவாலயங்களையும் தரிசனம் செய்த பலன் கிட்டும்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். இவரை சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார். 

சிவபெருமானை பூஜை செய்ய உகந்ததாக வில்வ மலர்கள் கருதப்படுகிறது. ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களில் தரிசனம் செய்த பலனும், கங்கை உள்ளிட்ட புனித நீர்களில் நீராடிய பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் வில்வத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. இது வில்வத்துக்கே உள்ள தனி சிறப்பாகும். வில்வம் உலர்ந்து போனாலும், எத்தனை நாட்களானாலும் பூஜைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது போன்று மற்ற பூக்களையோ, இலைகளையோ பயன்படுத்த கூடாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்