கோலம் ஏன் போட வேண்டும்? கோலம் போடுவதில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்..!

கோலம் ஏன் போட வேண்டும்? கோலம் போடுவதில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்..!

கோலம் என்பது வெறும் பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல. ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கிறது.

கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதையாகும். தினமும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவதால் எந்தவிதமாக கிருமிகளும் வீட்டிற்குள் நுழையாது.

அதிலும் மார்கழி மாதத்தில் கோலம் போடுவதில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மார்கழி மாத பனியில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கோலத்தை வைத்தே ஒரு வீட்டின் சூழ்நிலையை, அன்று எத்தகைய நாள் என்பதை முன்னோர்கள் கணித்து கூறி விடுவார்கள்.

கோலம் போடுவது வீட்டிற்கும் நமக்கும் நன்மை அளிப்பதோடு நமக்கு புண்ணியத்தையும் சேர்த்து தருகிறது. அதற்கு காரணம் நாம் போடும் அரிசி மாவு கோலம் தான்.

நம் முன்னோர்கள் அன்றைய காலத்தில் அரிசி மாவினால் தான் கோலம் போட்டனர். அப்படி அரிசி மாவினால் கோலம் போடுவதால் கடவுளால் படைக்கப்பட்ட வாயில்லா ஜீவராசிகள் பசியாறும். அது மிகப்பெரிய புண்ணியமாகும்.

கோலத்தின் அமைப்பானது வீட்டிற்கு லஷ்மி கடாட்சத்தை அளித்து துர்தேவதைகளைத் துரத்திச் செல்வ நிலையை உயர்த்தும். அரிசி மாவினால் கோலமிடுவதால் சிறு பூச்சிகளான எறும்புகளுக்கு அது உணவாகவும் பயன்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்