பணவரவு தரும் கரு மஞ்சள்: முழு விவரம் இதோ

பணவரவு தரும் கரு மஞ்சள்: முழு விவரம் இதோ

பொதுவாக சாதாரண மஞ்சள், கஸ்தூரி அல்லது விரலி மஞ்சள் தான் அதிகம் தெரியும். ஆனால் கரு மஞ்சள் என ஒரு மஞ்சள் உள்ளது, கருத்துப் போய் உள்ள இந்த மஞ்சள் உள்ளே நீல நிறத்தில் இருக்கும். இந்த மஞ்சள் பணத்தை ஈர்ப்பதற்கும் ஆன்மீக காரியங்களிலும் பயன்படுத்துவது வழக்கம்.

பணம் வேண்டி வெளியில் செல்லும் போது இந்த மஞ்சளை சிறிது கல்லில் இழைத்து நெற்றியில் திருநீறு போல பூசிக் கொண்டு சென்றால், கண்டிப்பாக சென்ற இடத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பணத்தை ஈர்ப்பதில் கிராம்பை போல, கருமஞ்சளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கொடுத்த பணம் வசூலாகாத சூழ்நிலையில் இந்த கருமஞ்சளை கொண்டு சென்று பாருங்கள். நீண்ட நாள் வாசூலாக பணம் கூட சுலபமாக வசூலாகிவிடும். அதே போல நீண்ட நாளாக அடைக்க முடியாத கடனை கூட உங்கள் பணப்பெட்டியில் இந்த கரு மஞ்சளை வைப்பதன் மூலம் அடைத்து விடலாம். 

கரு மஞ்சள் இருக்கும் இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். பணப் பிரச்சினைகள் நீங்கும். இந்த மஞ்சளை சிகப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியில் இறுக்கமாக கட்டி வைத்து அவற்றை பணம் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் போதும். அந்த இடத்தில் பணவரவு அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

பச்சை கற்பூரம் போன்றே, கரு மஞ்சளும் பணவரவிற்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்