பொதுவாக தெய்வ வழிபாடுகளின் போது ஊதுபத்தி ஏற்றுவது வழக்கம். இது தெய்வத்தை மகிழ்விப்பதற்காக செய்யப்படுவதாக நமது முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தெய்வ வழிபாடுகளின் போது ஊதுபத்தி ஏற்றுவது வழக்கம். இது தெய்வத்தை மகிழ்விப்பதற்காக செய்யப்படுவதாக நமது முன்னோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊதுபத்தி ஏற்றுவதனால் ஒரு பெரிய வாழ்க்கை தத்துவமே அடங்கியுள்ளது.
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.
இதுபோன்ற தன்னலமின்றி தியாக மனப்பான்மை குணத்தை உடையவர்கள் தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.