திருமலையில் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம்.!

திருமலையில் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம்.!

திருமலை திருப்பதி கோயிலில் இன்று 16 மணிநேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடைபெறுகிறது. 

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள தர்மகிரி வேத விக்னனா பீடத்தில் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,” கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் 40 வேத பண்டிதர்கள், 4 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு 10 பேர் அடங்குவர்.

உலக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்டுகிறது.

இதனால் ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர, ஏற்கனவே பிற திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அன்று ரத்து செய்யப்படுகின்றன.” என்று அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்