நாளைய சந்திர கிரகணம்: கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

நாளைய சந்திர கிரகணம்: கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது பிலவ வருடத்தின் முதல் சந்திர கிரகணம். கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காணமுடியும். இந்த கிரகணம் பகல் 2.17க்குத் தொடங்கி இரவு 7.19 வரை நீடிக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.

இதற்கிடையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. புராணத்தின் படி ராகு கேது ஆகிய பாம்புகள் சந்திர சூர்யர்களை விழுங்குவதால் கிரகணங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன், கேது ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் வரும்போது பௌர்ணமி திதி வருமானால் அந்த நாளே சந்திரகிரகணம் எனப்படும். 

அந்த நேரத்தில் உடலையும் உள்ளத்தையும் வேறு எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. அனைவரும் ஆன்ம சக்தி பெறக்கூடிய தியானத்தில் ஈடுபட்டால் ஆன்மா வலிமையடையும். 

இந்த நேரத்தில் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதும் நம்பிக்கை.

நாளை குரு பூர்ணிமா என்பதால் அனைவரும் தங்களின் குருக்களை மனதார தியானித்து வணங்கினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்