கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில் ஹரித்துவாரின் கும்பமேளா நிறைவு...!

கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில் ஹரித்துவாரின் கும்பமேளா நிறைவு...!

ஹரித்துவாரில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா இன்று நிறைவடைகிறது

உலக பிரசித்தி பெற்ற ஹரித்துவாரின் மகா கும்பமேளா வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 4 மாதம் நடைபெறும் கும்பமேளாவை ஒரு மாதமாக உத்தரகாண்ட் அரசு குறைத்தது. 

அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி இந்த கும்பமேளா தொடங்கியது. இதனிடையே, அதிகப்படியான பக்தர்களின் வருகை காரணமாக ஹரித்துவாரில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியது. 

இதையடுத்து, கும்பமேளா நிகழ்ச்சிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தன. இந்நிலையில், மகா கும்பமேளா ‘ஷாகி ஸ்நான்' என்ற புனித நீராடலுடன் நிறைவடைகிறது. 

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரையில் நடந்த இந்த கும்பமேளா நிகழ்வுகளில் சுமார் 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்