23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு:144 தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!

23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு:144 தடை உத்தரவு  பிறப்பித்த ஆட்சியர்!

23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கவிறுக்க நிலையில் , கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக  பரவி வருவதால் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். கொரோனா விதிமுறைகளின்படி நாளை குடமுழுக்கு நடக்க உள்ள நிலையில், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மக்களும் சோகத்தில் உள்ளனர்.மேலும் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை இணையம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பொதுமக்கள் பார்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்